இலங்கையில் மேலும் 3,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது நாட்டில் காணப்படும் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 393,223 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இன்றையதினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 222 பேர் குணமடைந்துள்ளனர்.
அதன்படி, 344 ஆயிரத்து 381 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 41,476 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, மேலும் 183 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7 ஆயிரத்து 366 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


