ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்.
திடீரென சுகயீனமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் சட்டத்தரணி கே.வி. தவராசாவின் மனைவியான இவர் பிரபலமான குற்றவியல் வழக்கறிஞராவார்.
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் சிறுமி ஹிசாலினி கொலைவழக்கு சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதீதூனுக்கு சார்பாக வழக்கில் வாதாடி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.


