வாள்வெட்டு கும்பல் தாக்குதலால் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்.குருநகரில் நேற்று மாலை வாள்வெட்டு குழுவின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குருநகரை சேர்ந்த ஜெனரன் (வயது24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம் பெற்ற சம்பவத்தில் 3 இளைஞர்கள் மீது வாள்வெட்டு கும்பல் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் 3 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *