
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9,606 பேர் தற்போது மருத்துவர்களின் மேற்பார்வையில் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 3,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
1390 ஹாட்லைன் மூலம் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகள் மட்டுமே வீட்டு சிகிச்சைக்கு தேவையான ஆலோசனைகளைப் பெற முடியும்.




