
கடந்த வாரம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் 60 வகையான மருந்துகள், 38 வகையான காண்டாக்ட் லென்ஸ்கள், இரத்த குளுக்கோஸ் தொகுதிகள் மற்றும் இதய நோயாளிகள் பயன்படுத்தும் ஸ்டென்ட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விலையை விட 9 சதவீதம் அதிகமாகும்.
இதுதொடர்பாக மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண, விலை உயர்வு மருந்துகளின் பற்றாக்குறையை தடுக்கும் நோக்கத்தில் அதிகரிப்பு இருப்பதாக தெரிவித்தார் .




