இந்த அமைச்சர் மாத்திரம் சம்பளத்தை அர்ப்பணிப்பு செய்ய மாட்டாரம்

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றை ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒருமாதச் சம்பளத்தை அர்ப்பணிப்பு செய்ய முன்வந்துள்ளனர்.

எனினும் ஒருவர் தனது சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாதென இன்று கூறியுள்ளார்.

சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சரான பியல் நிஸாந்த கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திலுள்ள அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே லாவிக்கொள்வதால் கோவிட் பணிக்காக சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாத பொருளாதார இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply