அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தங்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியத்திற்கு அர்ப்பணிக்குமாறு பிரதமர் மஹிந்தராஜபக்ச முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடியில் உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவும் அதிக நிதி செலவாகுகிறது.
எனவே தற்போதைய நிலையில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டதை அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
மேலும் நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையில் உள்ளது. அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய சிக்கலான நிலையை வெற்றிக் கொள்ள முடியும். அனைத்து தரப்பினருக்கும் நிதி பற்றாக்குறை உள்ளதென்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருப்பினும் கொரோனா தாக்கத்தில் இருந்து மீள்வது குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்.
அத்தோடு அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் மாத சம்பளத்தை கொவிட் நிவாரண நிதியத்திற்கு செலுத்தி நாட்டு மக்களுக்க ஒரு முன்மாதிரியாக செயற்பட வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களும் தங்களின் விருப்பத்திற்கு அமைய அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள். என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
‘ இடுகம ‘ கொரோனா நிதியத்திற்கு கடந்த காலங்களில் பெரும்பாலான தரப்பினர் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.அரச மற்றும் தனியார் நிறுவனத்தினர் நிதி மற்றும் வைத்திய உபகரணங்கள்ஊடாக உதவி புரிந்துள்ளார்கள்.அத்தோடு அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திக்கு வழங்க ஒன்றிணைந்த நிலையில் இணக்கம் தெரிவிப்பதற்கு முன்னர் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தனது மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.
மேலும் இவரது இச்செயலை பாராட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏனைய தரப்பினரும் இதனை ஒரு எடுத்துக்காட்டாக கருத வேண்டும். என்று குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.


