கடன் கொடுத்து ஏமாந்த நபர் எடுத்த விபரீத முடிவு – யாழில் பெரும் துயரம்! SamugamMedia

காணி வாங்குவதாக கூறி மகன் அனுப்பிய பணத்தை பெண் ஒருவரிடம் கடனாக கொடுத்து ஏமாந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் காணி வாங்குவதற்காக தனது தந்தைக்கு பணம் அனுப்பியுள்ளார்.

அப்பணத்தில் ஒரு கோடி ரூபாயை குறித்த நபர் பெண் ஒருவருக்கு கடனாக வழங்கியுள்ளார். ஆனால் அந்த பெண் பணத்தை வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் இரண்டு முறை அதிக மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதன் பிறகு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவேளை மீனவர்களின் உதவியில் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவங்கள் ஒரு மாதத்திற்குள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீமூட்டிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *