மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

சீனாவில் இருந்து மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

மேலும் பீஜிங்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் – 869 என்ற விமானத்தில் இந்த தடுப்பூசி அளவுகள் இன்று அதிகாலை 5.09 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதனிடையே மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி அளவுகள் இந்த மாத இறுதியில் நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு இலங்கை இதுவரை சீனாவிடமிருந்து மொத்தமாக 15.7 மில்லியன் தடுப்பூசிகளை டோஸ்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply