நாட்டில் நேற்றைய தினம் (23) கொரோனா தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில் 103 பெண்களும் 91 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 22 நாட்களில் 3 ஆயிரம் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





