யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (23) மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும், யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த இஸ்லாமிய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது.





