சீனாவில் நேற்றைய தினம் (23) ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் வீரியம் கூடிய டெல்டா தொற்றினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதில் சீனா பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தது.
சீனாவின் கிழக்கு நகரான நான்ஜிங்கில் உள்ள வாநூர்தி தளத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு டெல்டா தொற்று முதன் முதலாக இனங்காணப்பட்டது.
இதனையடுத்து சீனாவில் உள்ள 31 மாகாணங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகியிருந்தது.
டெல்டாவினால் ஏற்பட்ட சவாலை சமாளிக்க கடுமையான முடக்கல் பிரகடனப்படுத்தப்பட்டு மக்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாக தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்றினை பூஜ்ய நிலைக்கு கொண்டுவர சீன சுகாதார தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த செயல்பாட்டில் சீனா தற்போது வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா தொற்று அற்ற நாடாக சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முனைப்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா அற்ற நாடாக மாறியுள்ளது.





