
அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று (திங்கட்கிழமை) மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் நாளை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




