இலங்கையில் காலணி திருடன் – ரூ.9 இலட்சம் பெறுமதியான காலணிகள் கொள்ளை! SamugamMedia

 காலணி தொழிற்சாலை ஒன்றில் ஒன்பது இலட்சத்து ஐம்பத்து நாலாயிரத்து எழுநூற்றி ஐம்பது ரூபா பெறுமதியான 355 ஜோடி காலணிகளை திருடிய நபரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாதம்பே பழைய நகரைச் சேர்ந்த நாற்பத்தொன்பது வயதுடைய   சந்தேகநபரே  இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

மாதம்பே பழைய நகரில் உள்ள பெண்களுக்கான காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் இரவில் தொழிற்சாலையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த காலணிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாதம்பை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், அந்தப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதணிகளுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply