அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் சங்கம்

தமது சம்பள பிரச்சினை தீர்ப்பதற்காக நேற்று திங்கட்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தமது பிரச்சினைகளை தீர்க்காமல் அரசாங்கம் தவிர்த்து வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆசிரியர்களுக்கு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்த சிலர் முயற்சிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply