கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒட்சிசன் வாயுவை வாராந்தம் தலா 3 இலட்சம் லீட்டர் அளவில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், திருகோணமலை துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி புறப்பட்டு சென்ற சக்தி கப்பல், சுமார் 40 தொன் ஒக்சிசனை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் (22) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





