மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாரக் அவர்களின் தலைமையில் மூதூரில் கொரனா பரவலைக் கட்டுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
மேலும் இக் கலந்துரையாடல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் அத்துகோரல திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் மூதூருக்கான இணைப்பாளர் எம்.ஏ.எம். முபாரக் ஆகியோருடன் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் என்.எம். ஹஸ்ஸாலி , பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தோர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தலுக்கான துரித நடவடிக்கைகள் தொடர்பாகவும் மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிலவுகின்ற வாகன பிரச்சினையை உடனடியாக தற்காலிகமாக நிவர்த்திக்கும் வகையில் வாகன ஏற்பாடும் செய்யப்பட்டது.





