
‘அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்’ என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி மாரடைப்பால் 38ஆவது வயதில் உயிரிழந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த இகோர் வோவ்கோவின்ஸ்கி என்பவர் 7 அடி 8 அங்குல உயரம் (234.5 செமீ) கொண்டவர். இந்த அசாதாரணமான உயரத்திற்காக, தன்னுடைய 27-வது வயதில் ‘அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்’ என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இகோர் வோவ்கோவின்ஸ்கி, சில ஆண்டுகளாக இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இகோர் கடந்த 20-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அதே நாளில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக அவரது தாயார் ஸ்வெட்லானா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




