அகதிகள் போர்வையில் தலிபான்கள்: பிரான்ஸ் தீவிர விசாரணை!

பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த ஒருவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 15ஆம் திகதி காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்வதற்குச் சில நாட்களின் முன், இவர் ஆயுதங்களுடன் தலிபான்களின் பக்கம் நின்றிருந்துள்ளமையை பிரான்ஸின் புலனாய்வுப்பிரிவினர் உடனடியாக அவதானித்துள்ளனர்.

அகதிகள் போல் பிரான்ஸிற்குள் ஊடுருவிய தலிபான் ஆக இவர் இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்பட்ட நிர்வாகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையான MICAS நடவடிக்கையின் கீழ் இவரும் இவருடன் தொடர்புடைய ஐந்து பேரும், புலனாய்வு மற்றும் பயங்கரவாதத் தடைப்பிரிவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் பொலிஸாரின் அன்றாடக் கண்காணிப்பிற்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் மேலும் ஆயுததாரிகளோ, தலிபான்களே பிரான்ஸ் மண்ணில் ஊடுவினால் அது பெரும் ஆபத்தாக அமையும் என உட்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காபூலில் இருந்து 2.000பேர் பிரான்சுக்கு வந்துள்ளதாக உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *