வவுனியா வடக்கில் நடமாடும் தடுப்பூசித்திட்டம்

வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குறித்த பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று (24) காலை 8 மணிமுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

எனினும் இதன்போது உரிய சுகாதார நடுமுறைகளை பேணி கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத முதியவர்கள் வருகைதந்து தடுப்பூசியினை பெற்றுச்சென்றனர்.

அத்தோடு வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி திலீபன் மற்றும் இராணுவ அதிகாரிகள், சுகாதாரதரப்பினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply