வவுனியா நகரசபையினால் பிளாஸ்டிக் கழிவுகளை மீள் சுழற்சிக்காக வெட்டும் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை குறித்த இயந்திரத்தின் பணிகளை நகரசபை தலைவர் கெளதமன் பரீட்சித்துபார்த்து ஆரம்பித்து வைத்தார்.
பிளாஸ்டி கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் திட்டத்தின் கீழ் PSDG இன் நிதியில் சுமார் 14 இலட்சம் ரூபாயில் இந்த இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை சிறு துணிக்கைகளாக வெட்டி மீள் சுழற்சிக்கு பயன்படுத்த முடியும்.
இந்த பணிகள் தற்போது நகரசபையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி சூழலை மாசுபடுத்தாமல் நகரசபையிடம் கையளிக்குமாறு நகரசபை தவிசாளர் கெளதமன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனியா நகரசபையில் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பிளாஸ்ரிக் பொருட்களை வழங்கும் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


