யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் நிலநடுக்கம் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் சென்னையின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply