யாழ்ப்பாணத்திற்கு 600 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நில அதிர்வு

யாழ்ப்பாணத்திற்கு 600 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடா கடற்பரப்பில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியது.

அத்தோடு ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிரியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply