
இன நல்லிணக்கத்தை விரும்பிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மறைந்தார்!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 24.08.2021 இன்று கொவிட் தொற்று காரணமாக காலமானார். சிறுபான்மை மக்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுவதை விரும்பி செயற்பட்ட ஒரு அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.
வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர் என்றால் அது மிகையல்ல.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மாத்தறையில் பிறந்த மங்கள சமரவீர கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
1983 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை அமைப்பாளராக அரசியலுக்குள் நுழைந்த இவர் 1989 ஆம் ஆண்டு முதற்தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
முன்னாள் அமைச்சர் சந்திரிகாவின் ஆட்சியிலும் முன்னாள் அமைச்சர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் முக்கிய அமைச்சு பொறுப்புக்களை வகித்ததுடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து நிதி அமைச்சராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் இருந்துள்ளார்.





