கிண்ணியா பிரதேச சபையில் கடமையாற்றும் சில ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால் சில தினங்களுக்கு சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் தெரிவித்துள்ளார்.
எனவே மறு அறிவித்தல் வரை சபையின் சேவையை நாடி பொது மக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்களுடைய வீடுகளில் சேர்த்து வைக்கப்படுகின்ற வீட்டுக்கழிவுகளை சுயமாகவே அகற்றி சுத்தத்தினை பேணுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்





