தெரணியகலை – தெமேத பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்தக் கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உயிரிழந்தவருக்கு அவரது மூத்த சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதாகவும் இதனையடுத்தே இவ்வாறு குறித்த நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 45 வயதான திருமணமாகாதவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த கொலைச் சம்பவம் தொடர்பிரல் 54 வயதான சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





