இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும், சிசுக்கள் கூட சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாவலயில் உள்ள ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் கல்வி பயிலும் 12 வயதான மாணவி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
அதன்படி, ராஜகிரியவில் வசிக்கும் அபிமானி நவோத்யா சேரசுந்தர என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி, 7 ஆம் தரத்தில் கல்வி பயிலும் சில நாட்களுக்கு முன்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, பலாங்கொடை- மாரதென்ன, தெதனகல பிரதேசத்தில், மூன்றரை வயது சிறுமியொருவர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





