யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில் இன்று (24) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பிரதேச செயலர், கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





