ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கொரோனா நிதியம் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.
அதற்கமைய, குறித்த நிதியத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காசோலை மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் காசோலை என்பன கட்சியின் பொருளாளர் லசந்த அலகியவன்னவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிதியத்துக்கான வங்கிக்கணக்கு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையில் திறக்கப்பட்டுள்ள அதேவேளை, 143100150009171 என்ற கணக்கு இலக்கத்துக்கு உதவித்தொகையை வைப்பிலிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், ஆதரவாளர்களிடம் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கோரிக்கை விடுத்துள்ளார்.





