கேகாலை – தெரணியகலை, தெமேத பகுதியில் இன்று (24) கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் அவரது மூத்த சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்புடைய 54 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





