கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,112 பேர் இன்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக 3 ஆயிரத்து 315 கொவிட் தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று மாத்திரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 427 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 386 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 46 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது.





