திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகத்தில், பயணத்தடை விதிக்கப்பட்டதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏலவே அரசாங்கத்தின் எவ்வித உதவித்தொகையும் பெறாத குடும்பங்களுக்கான 2000 ரூபா உதவிக்கொடுப்பனவு வழங்கல் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் தற்போது கொரோனா தொற்றுப் பரவல் நிலையில் மக்கள் செயற்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மக்களை அறிவுறுத்துமாறு இதன்போது அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளிடம் வேண்டிக்கொண்டார்.
இதன்போது குச்சவெளி பிரதேச தவிசாளர், பிரதேச செயலாளர் கே.குணநாதன், துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





