பிக்பொஸ் சீசன் 5 பற்றி வெளியான புதிய அறிவிப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பொஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கi கடந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி ஒக்டோபர் வரை நடத்தப்படும்.

ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், ‘பிக்பொஸ் சீசன் 4’ நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை.

பின்னர் ஒக்டோபர் மாதம் தொடங்கி இவ்வருடம் ஜனவரி 16 ஆம் திகதி வரை நடைபெற்றது.

கடந்த சீசனை போல் பிக்பொஸ் நிகழ்ச்சியின் 5 ஆவது சீசனும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தான் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில், ‘பிக்பொஸ் சீசன் 5’ நிகழ்ச்சிக்கான புரமோஷன் போட்டோஷூட் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றிருந்த நிலையில், அதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் இந்த வாரத்தில் ‘பிக்பொஸ் சீசன் 5’ நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *