
ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக, சீனாவிலிருந்து உள்நாட்டில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று, சீனாவில் 21 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், ஆனால் அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
இதனிடையே டெல்டா வைரஸ் திரிபு உலகெங்கும் பரவி வரும் சூழலில் சீனாவில் தொடர்ந்து உள்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனில் டெல்டா வைரஸ் பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் உலகின் முதல் நாடாக சீனா மாறும்.
கடந்த ஜூலை மாதம் டெல்டா விகாரங்கள் முதன்முதலில் சீனாவின் நான்ஜிங்கில் அடையாளம் காணப்பட்டது.
அதன்படி, சீனாவின் 31 பிராந்தியங்களில் இதுவரை சுமார் 1,500 டெல்டா நோய்த்தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இத்தகைய டெல்டா பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொண்டு, சீனா சில பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தினசரி மில்லியன் கணக்கான மக்களை சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் வுஹானில் இருந்து கொரோனா தொடங்கிய நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க சீனா கடுமையாக உழைத்து வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.




