முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபமான அஜித் ரோஹண, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் தற்போது தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவரது உடல்நிலை தொடர்பில் கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





