இதுவரை தடுப்பூசி பெறாதோர் தொடர்பிலான விபரம் வெளியானது

நாட்டில் தற்போது வரை 60 வயதிற்கு மேற்பட்ட 4 இலட்சத்து 55 ஆயிரத்து 539 பேருக்கு எவ்வித கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் சனத்தொகையில், 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது, 35 இலட்சத்த 19 ஆயிரத்து 190 ஆக உள்ளது.

இந்நிலையில், அவர்களில் 30 இலட்சத்து 63 ஆயிரத்து 651 பேருக்கு ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட, எந்தவொரு கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளதவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 ஆயிரத்து 427 பேர் அங்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாது உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம், கொழும்பு மாவட்டத்தில், 60 வயதிற்கு மேற்பட்ட 36 ஆயிரத்து 14 பேர் கொரானா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *