இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும்.
மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.