மத்துகம பொலிஸினால் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்த வந்த போது உயிரிழந்துள்ளார்.
மேலும் சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து வரும் போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அலரை வேன்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேகநபரை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யததொலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவரே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
அத்தோடு நாகொட பொது மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை செய்தார். அந்த நபர் COVID-நிமோனியாவால் இறந்தது தெரியவந்தது.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்தவருக்கு வெளிப்புற அல்லது உள் காயங்கள் இல்லையென்று கூறப்பட்டுள்ளது.





