இலங்கையில் எகிறியுள்ள ஆணுறை விற்பனை! வெளியான தகவல் samugammedia

வழக்கத்துக்கு மாறாக நாடு முழுவதும் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாக இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த ஒரு தர அடையாளத்தின் ஆணுறைகள் தொலைதூரப் பிரதேசங்களிலும் வேகமாக விற்பனையாவதாக குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷாரா ரணசிங்க தெரிவித்துள்ளார்,

கருத்தரித்தலில் இருந்து மட்டுமன்றி பாலினம் மூலம் கடத்தப்படும் நோய்களிலிருந்தும் ஆணுறைகள் இரண்டு வழிகளில் பாதுகாப்பு செய்கின்றன எனவும்  இளைய சமுதாயத்தை பாதுகாக்க ஆணுறைப் பயன்பாடு ஒரு சிறந்த வழியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும்,  சில கலாச்சார நம்பிக்கைகளால் மக்கள் ஆணுறைகளை வாங்குவதற்குத் தயங்குகின்றனர்.

பரபரப்பான பகுதிகளான புகையிரத நிலையம், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொருள் வழங்கும் தன்னியக்க இயந்திரங்களினூடாக ஆணுறைகளைப் பெறக்கூடிய வழிமுறையை முன்னெடுக்க  இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் முன்வந்த போதும் அதற்கான அனுமதிகளைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply