
ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில பகுதிகளிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 2.0 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
எவ்வாறிருப்பினும் பாதிப்புகள் ஏதும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நேற்று பிற்பகல் 12.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




