இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அத்தனகல பிரதேச சபை, இலவசமாக முன்னெடுத்துள்ளது.
மரணமடைந்தவர்களுக்குத் தேவையான சவப்பெட்டியையும் அந்த சபை இலவசமாகவே வழங்குகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்றபேதங்களின்றி சகலரும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால், அவர்களுக்கு உதவும் வகையிலேயே அவ்வாறான சடலங்களை இலவசமாக அடக்கும் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அத்தனகல பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த புஷ்பகுமார
தெரிவித்தார்.
மேலும், குறைந்த வருமானங்களைப் பெறுகின்றவர்களும் சவப்பெட்டியை கொள்வனவு செய்யும் போது உதவியற்றவர்களாக நின்கின்றனர்.
இந்நிலைமையில், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில்,
மரணிப்போருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தால். அவர்களின் உடல்களை இலவசமான அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
சவப்பெட்டி உற்பத்திக்காக சபையின் நிதியை பயன்படுத்த மாட்டோம். நன்கொடையாளர்கள் சிலர். பலகைகளை இலவசமாக தருகின்றனர்.
சபையில் இருக்கும் எங்களுடைய பணியாளர்களின் அர்ப்பணிப்பில் சவப்பெட்டிகளை தயாரித்து இலவசமாக
வழங்குகின்றோம் என்றார்.





