இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் முறைமை மிகவும் நல்லது என ராகம வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்தார்.
மேலும், தற்போதைய நிலையில் எவர் என்ன சொன்னாலும் நாட்டை முழுமையாக திறக்காமல், இவ்வாறான முறையிலேனும் நாட்டை மூடி வைத்திருப்பது நல்லது என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அவ்வாறே அமுலில் இருக்கவேண்டுமா? என்பது தொடர்பில் தன்னால் எதுவும் தெரிவிக்கமுடியாது.
ஆனால், நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் செயற்பாடுகளின் பெறுபேற்றை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்கவேண்டும் ,எனவும், கைத்தொழிற்சாலைகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படுவது எவ்விதமான சிக்கல்களும் இல்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.





