யாழ் மாவட்டத்தில் நாய்கள் வளர்ப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia

வளர்ப்பு நாய்களுக்கான விலங்கு விசர் நோய்க்கெதிரான தடுப்பூசி இலவசமாகவே ஏற்றப்படுகிறது என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் தற்போது வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்க்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இத்தடுப்பூசியானது சுகாதாரத் திணைக்களத்தினால் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் விலங்கு விசர்நோய்க்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யாழ் மாவட்டத்தில் விலங்கு விசர்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உங்கள் வளர்ப்பு நாய்களுக்கு இந்தத் தடுப்பூசியை இலவசமாகப் பெற்றுக் கொடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் -என்றார்.

Leave a Reply