தரம் 1இற்கு மாணவர்களை சேர்க்கும் தேசிய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு! samugammedia

தரம் 1க்கு மாணவர்களை சேர்க்கும் தேசிய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றார். குறித்த நிகழ்வு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மகாவில்லியாலயத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்கள் அழைத்துவரப்பட்ட அதேநேரம், விருந்தினர்களிற்கு மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபம் வரை அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து மங்களவிளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. 

Leave a Reply