மனித பாவனைக்கு உதவாத சீனி மூடைகள் மீட்பு

மனித பாவனைக்கு உதவாத 50 கிலோகிராம் சீனியுடன் இருவர் புறக்கோட்டைப் பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம், புறக்கோட்டை- யோவுன் வீதியில் இடம்பெறுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து அம்பாறைக்கு லொறியொன்றில் கொண்டுச் செல்வதற்குத் தயாராகவிருந்த நிலையில், 50 கிலோகிராம் சீனி மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 200 மூடைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலைத் தொடர்ந்து குறித்தப் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளதுடன் சீனியையும் மீட்டுள்ளனர்.

இச் சுற்றிவளைப்பில், லொறியின் சாரதியும் உதவியாளருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply