நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மல்லாவி வர்த்தக நிலையம் ஒன்றிற்கு நேற்று(24) மாலை பிராந்திய சுகாதார பிரிவினரால் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக வாணிபங்கள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தினை திறந்து பொருட்களை விற்பனை செய்து வந்த வர்த்தக நிலையம் ஒன்றே பிராந்திய சுகாதார பிரிவினரால் இவ்வாறு பூட்டப்பட்டுள்ளது.





