முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் இன்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளமை மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது
நேற்று முன்தினம் (23) நாயாறு பகுதியைச் சேர்ந்த தென்பகுதியில் இருந்து வருகைதந்த மீனவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து நேற்றைய தினம்(24) புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும்(25) முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்
இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த வர்த்தகர் கணுக்கேணி கிழக்கு பகுதியை சேர்ந்த 78 வயதுடைய கந்தசாமி யோகானந்தம் என்பவராவார்
தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களும் இறப்புக்கும் அதிகரித்து வருகின்ற நிலையில் மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறும் அனாவசியமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்





