கிரிபத்கொடை பிரதேசத்தில் 11 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கொனஹேன காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு கிரிபத்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து 11 கிராம் ஹேரோயினும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 26 இலட்சம் ரூபா பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தோடு மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பெண் கிரிபத்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.





