காபூலில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்?

<!–

காபூலில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்? – Athavan News

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை 12 மணிக்குள் சுமார் 12,000 பேர் வெளியேறினர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதில் அமெரிக்க இராணுவ விமானங்களில் சுமார் 6,400 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் அமெரிக்கா 70 ஆயிரத்து 700 பேரை இடமாற்றம் செய்ய உதவியுள்ளது.


Leave a Reply