30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன

<!–

30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன – Athavan News

இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த நிலையில், 60 வயதிற்கு மேற்பட்டோர் விரைவில் தங்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்களுக்குச் செல்ல முடியாத 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply